Tuesday, September 22, 2009

யாஹுவில் தமிழில் chat செய்யலாம்

யாஹுவில் தமிழில் chat செய்யலாம்

வணக்கம் வலையுலக மக்களே... என் நண்பர்கள் பலர் யாஹு மெசஞ்சரை உபயோக்கிறார்கள் ஆனாலும் அதில் யுனிகோட் தமிழில் அரட்டை அடிக்க முடியவில்லை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.... நானும் வெகு காலமாக முயன்று பார்த்தேன் முடியவில்லை... பின் ஏதோ வலைத்தளத்தில் அது முடியும் என வாசித்தேன் முயன்றும் பார்த்தேன் சரியாக வந்தது. சரி என்று அதனை bookmark செய்தும் வைத்தேன்... பின் எனது கணனியினை format செய்யும்போது அந்த bookmarkகளை save செய்யாமல் அழித்துவிட்டேன்... பின் இன்று ஏதோ நினைவு வர திரும்பவும் அதனை முயன்று பார்த்து சரி வந்துவிட்டது.... தெரிந்ததை நான் மட்டும் வைத்திருந்தால் நல்லதல்ல என்பதால் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்

முதலில் உங்கள் கணனியில் e-கலப்பை போன்றதொன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.(நான் உபயோகிப்பது e-கலப்பை. அதற்கு மட்டும்தான் சரி வருகிறதோ தெரியவில்லை அதோடு நான் எனது Operating System XP, vistaவில் வேலை செய்கிறதா என்னவோ தெரியவில்லை) e-கலப்பையை நிறுவியபின் யாஹு மசெஞ்சரில் log in ஆகி அதில் preferenceய் தெரிவு செய்யவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளது போன்ற ஒரு புதிய window திறக்கும்....

அதில் appearanceய் தெரிவு செய்யவும் அதில் change font & colors என்பதைத்தெரிவு செய்யவும்.... அப்பொழுது உங்களுக்கு கீழே காட்டப்பட்டிருப்பது போல் ஒரு புதிய window திறக்கும்..


அதில் fontஇல் TSCu_Paranar.ttf என்னும் fontஇனை தெரிவு செய்து okவினை கிளிக் செய்யவும்.... பின் preferanceல் okவினை கிளிக் செய்து சாதாரணமா யாஹூ மெசெஞ்சரில் அரட்டை அடிக்கும்போது யுனிகோடினை தெரிவு செய்து தமிழி டைப்பண்ணினால் கீழே உள்ளது போல் தமிழில் அழகாக வரும்


font தேவையானவர்கள் இங்கே download பண்ணிக்கொள்ளுங்கள்


தமிழில் தட்டச்சு செய்தல்...

nav bar ஜ தெரியாமல் செய்வது எப்படி? வீடியோ.

Sunday, September 20, 2009

நடு வழியில் ஒரு ரயில்

ஏன் என்று கேட்டால் காரணம் சொல்ல முடியாது.

வாழுகின்ற வாழ்க்கையில், இதுவரை வந்த வழிபயணத்தில் அவ்வப்போது சில 
பாதிப்புக்கள்.
 ஏதோ ஒரு ஓவியக்கண்காட்சியில் ஏதோ ஒரு ஓவியன் வரைந்த ஒரு கிராமத்துக்காலைநேரம், இன்னும் மனதில்,கான்வாஸில் இருந்த சித்திரத்தைக் கண்ணுற்றது ஒரு கனப்பொழுதுதான் எனினும் அது மனதில் எப்படி வரையப்பட்டது
 மலையடிவாரம் நோக்கிச்சென்ற பாதையும் முடிவில் தொடுவானமும், தொடுவானில் சிகப்பு சூரியனின் உச்சியும் துனையின்றி நின்ற ஒற்றை பனையும் குடிசையும், குடிசை வாசலில் ரவிக்கையணியாத, கவலை முகத்துடன் ,
யார் வரவையோ எதிர்பார்த்து நின்ற இளம் பெண்ணும் ஏன்  இன்னும் மறையாமல் 
வாழ்கிறார்கள் ?  காரணம் தெரியாது.
ஆனால் இன்றைக்கு பிக்காஸ்ஸொவும் லக்‌ஷ்மனனும் மதனும் மருதுவும் ம.செ வும்  தங்களின் ஒவியங்கள் மூலம் அறிமுகமான பின்னரும் அன்று பார்த்த ஓவியம் தான் உலகிலேயே  மிகச்சிறந்த ஓவியமாய் இன்றும் தோன்றுகிற விந்தைக்கு என்ன காரணம் ? தெரியவில்லை.                                                                         

ஒரு மின்னல் நேரத்திற்கு நம் மனதை பாதிகிறவர்கள் வாழ் நாள் வரைத்தங்கி அவ்வப்போது ஒரு சோகத்தை விநியோகம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
சோகம் ஒரு சுகம் என்று நிருபித்துக்கொண்டே இருக்கிறார்கள். பஸ்ஸ்டாண்டின் பிளாட் ஃபாரக் கிராதியில் ஒற்றைக்கால் வைத்து நின்று கண்ணீர் சிந்திய அந்தப்பெண் தாய்ப்பசுவின் முன் வந்து வாயில் நுரைபூக்க இறந்த அந்த கன்று இரவின் மெளனத்தில் குன்றின் உச்சியில் எரிந்த அந்த சிவப்பு விளக்கு-

சொல்லிக்கொண்டே போகலாம், அந்த வகையில் ஒரு கதை.
 இலக்கியமும் இஸமும் புரியாத நாட்களில் கதை படிக்கும் ஆர்வம் மட்டுமே கொண்டு கதை படித்த நாட்களில் இது கதையல்ல வாழ்க்கை ,இது வாழ்க்கையல்லை  நீ  என்று தன் சுட்டு விரலை எங்களை நோக்கிக் காட்டிய அந்த கதை.........
படிக்கும் போதே பரபரப்பாய் படிக்க வைத்து, படித்துமுடித்தபின் கண்ணீரைக் கரகரவென்று வழியவிட்டு, தேம்பி தேம்பி அழ வைத்த அந்தக்கதை:
 எல்லோரும் பிறக்கிறோம் உண்கிறோம் ,உறங்குகிறோம்,மரிக்கிறோம் என்ற சக்கரமான அர்த்தமற்ற வாழ்க்கை என்று நாங்கள் நினைத்திருந்த வாழ்க்கையை இதுபோன்ற கதைகளை படிக்கத்தான் இறைவன் பிறப்பு வரம் கொடுத்திருக்கிறான்
என்று எங்கள் வாழ்க்கையையே அர்த்தமுள்ளதாக செய்த அந்த கதை....


சொல்கிறோம்.

பின்னாட்களில் சாண்டில்யனின் “யவனராணி” பாதித்திருப்பினும் ஜானகிராமனின் “மோகமுள்” இரண்டு நாட்கள் உணவு உறக்கத்தை மறக்கும் அளவு பாதித்தாலும்

நா.பா வின் “பொன்விலங்கு”, ஜெகசிற்பியனின் “ஜீவகீதம்”. சுஜாதாவின், காகிதச்சங்கிலிகள்.நைலாண்கயிறு, இன்னும் எராளமான எழுத்தாளர்கள் எங்களை
 பாதித்தாலும் கூட ...............

அந்த கதைபாதிப்பு என்பது மொட்டு விடும் பருவத்தில் தோன்றும் முதல் காதல் போல.....
கதை ஒரு கற்கோவிலில் தொடங்கும்.கதையின் நாயகன் கோவிலின் கல் சன்னல் வழியே வெளியே பார்ப்பான்.வெளியே பெய்யும் மழையும் வீசும் காற்றும் அவனை நடுங்கச்செய்யும்.
                அவன் கற்கோயில் சன்னல் வழியே வெளியே பார்க்கும் போது அக்கண்முன் அவனது வாழ்க்கைப்பாதை விரியும்.
                 அவன் அழகன் அல்ல.நோஞ்சானாகப் பிறந்த போது “செத்துவிடுவான்” என்று தகப்பனால் எதிர்பார்க்கப்பட்டவன்.ஆனால் சாகாதவன் பிற்ந்த நான்காவது நாளில் அம்மாவுக்கும் சீட்டு கிழித்தவன் அவன் வளர்ந்ததும் அப்பா தான் பெற்ற கடனைத்தீர்க்க. அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்கிறார். இவனுக்கு நிரந்தரமான வேலை அமையும் வரை வந்த மருமகளுடன் இவனை இனைய விடாமல் பார்த்துக்கொள்கிறார். ஊருக்கு பக்கத்தில் ரயில்வே ஸ்டேசன் அதன் லோகோ செட்டிற்குப் பக்கத்தில் தண்டவாளத்தில் கரி எஞ்சின்கள் ஷ்ண்டிங்கிற்காக இப்புறமும் அப்புறமும் அலைவதுண்டு.அந்த எஞ்சின்களில் ஃபயர்மேன்கள் இவனுக்கு ஒரு நாலணா காசைக்கொடுத்துவிட்டு இன்ஞ்னில்  
 கரி அள்ளிப்போடச்சொல்லிவிட்டு சொந்த வேலைகளைக் கவனிக்கப் போய்விடுவார்கள் தான் அரிக்கப்படுவதை உணராமல் இவனும் சந்தோஷமாய் கரி அள்ளிக்கொட்டுவான்.
                     இன்ஞினில் நெருப்பு ரத்தக்குழம்பாய் எரிவதைப்பார்ப்பதே அவனுக்கு சந்தோஷம். அவன் மனைவி இந்த மாதிரியான ஒரு வெகுளியுடன் இனையவும் முடியாமல் வீட்டில் சும்மா வசவு வாங்குவதைப்பொறுக்க முடியாமல் அப்பாவுடன் தன் பிறந்த வீட்டிற்கே போய்விடுகிறாள் இவனுக்கு அம்மை போடுகிறது.முகத்தில் அம்மை தழும்புகள் அம்மை நோய் அவனைவிட்டுப்போகும் போது அவனது பேச்சையும் அள்ளிக்கொண்டுபோக இன்றைக்கு அவன் மொழி பே....பே.... அம்மைத்தழும்புகளுடன் அவலட்சனமான முகம் .அப்பாவும் இறந்துவிட, மனைவியும் பிரிந்து விட அனாதை.
    கோவில் பிரகாரவாசம் ரயில் நிலையத்தில் மசால் வடைத்தட்டை கையில் ஏந்தி விற்றுக்கொண்டு ஒரு வயிற்றுப்பிழைப்பு.


மனைவி விவாகாரத்துப்பெற்று வேறொருவனை மனக்கிறாள். இப்படியாப்பட்ட நாளில் தான் மழை புயல் ராத்திரி முழுக்கப்பெய்தமழை ஊரையே மூடுகிறது. வீசியக் காற்று மரங்களையெல்லாம் சாய்க்கிறது விடிந்ததும் ரயில் நிலையம் போகிறான் ரயில் நிலையக்கட்டிடம் இடிந்து இருக்கிறது. தூரத்தில் ஒரு ரயில் நிற்கிறது அருகில் போய்ப்பார்த்தால்  அந்த ரயில் இன்ஞ்சின் பாறைப்பட்டு நசுங்கி இருக்கிறது  இரு ஃபயர்மேன்களில் ஒருவர் இறந்துபோய்விட்டார். அடுத்தவர் சுயநினைவின்றி இருக்கிறார் டிரைவர் தோள் எலும்புமுறிந்து ரத்தக்காயத்துடன் .

ரயிலில் இருக்கும் பயணிகள் சோறு தண்ணீர் இன்றி அவதிப்படுகிறார்கள். பக்கத்தில் இருக்கும் பெரிய ஸ்டேஷ்சன் ஒன்றிற்கு போய்ச்சேர்ந்துவிட்டால்
அழகுக்காக மட்டும் ஒரு பெண்ணை மனப்பது. அடித்திருக்கும்  பெயிண்டுக்காக மட்டும் வீட்டை வாங்குவதைப்போல.

குதிரையையும் மனைவியையும் கடிவாளம் இல்லாமல் உபயோகித்தால் ஆபத்து நிச்சயம்.

உடம்பை முழுக்க மூடுகிற மாதிரி உடை அணிந்து என்ன பயன்? உதட்டில் புன்னகையை அணியாதவரை நீங்கள் முழு நிர்வாணமே.

கவிதை

மன்னிப்பது நல்லது
மறந்து விடுவது மிக்ச்
சிறந்தது.
இப்படி வாழுங்கள்
பூமியில் மகிழ்ந்திருப்போம்
செத்தபின்பும் வாழ்ந்திருப்போம்.

இடி பெரும் சப்தத்தை உண்டாக்குகிறது
ஆனால்
மின்னலே சக்தியை கொடுக்கிறது.

பிரிவைக்கண்டு -அவள் 
கண்கள் கலங்கின
என் இதயமே கலங்கியது
அவளுக்கு எப்படி தெரியும்




நீ நிலம் பார்த்து
நடப்பது சரி....
குனிந்து நிற்பவனை கூட
நிமிரச்செய்கிறதே !
உன் கொலுசுசத்தம்

எனக்கு பிடித்த வரிகள்

இனிய குரலெடுத்து அழகாகப்பாடக்குடிய பறவைகள் மட்டும் தான் பாடுவதென்று ஆகிவிட்டால் காடு நிசப்தமாகிவிடும்.

இந்த உலகம் விரிந்து பரந்தது இங்கே யாருக்கும் ஏதும் சாஸ்வதம் இல்லை எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் எதையும் விரும்பலாம் .ரசிக்கலாம் ஒன்றை விரும்பி அது கிடைக்காவிட்டால் அல்லது ஒன்று சேர முடியாவிட்டால் அதற்காக மனமுடைந்துவிட வேண்டியதில்லை .ஒன்று இல்லையென்றால் இன்னொன்று அதுவும் இல்லை என்றால் மற்றொன்று மனதை விசாலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இழந்ததை நினைத்து இருப்பதையும் இழக்கக்கூடாது.